ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கி தருவதாக மோசடி - 4 பேர் கைது!

Sep 10, 2020 10:18 AM 929

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிச்சாலையில் வசிக்கும் சுனில் குமார் ஹண்டா என்பவரின் மகனுக்கு ஹார்வார்ட் பல்லைக்கழக்கழகத்தில் படிப்பதற்கு இடம் வாங்கித் தருவதாக ராஜசேகரன் என்பவர் கூறியுள்ளார். மேலும், அக்ஷயா அஸ்வந்தி, அவரது தந்தை செம்பையா விஸ்வநாதன், அவரது தாய் ஆகியோரையும் ராஜசேகர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சுனில் குமார் ஹண்டாவிடம் 58 லட்சத்து 40 ஆயிரத்து 800 ரூபாயை கொடுத்துள்ளார். இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெயரில் போலியான ரசீதுகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இது குறித்து சுனில்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்ததை அடுத்து, நான்கு பேரையும் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted