நவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்

Sep 22, 2020 10:02 PM 1544

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளத் தகவலில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின் படி, வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் முதலாமாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் என்று கூறியுள்ள ரமேஷ் பொக்ரியால், 2வது பருவத்திற்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இரண்டாம் பருவத்தேர்வுகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted