கஜா புயலுக்கு முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனைக்கூட்டம் - முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

Nov 12, 2018 05:09 PM 615

சென்னை மற்றும் நாகை இடையே கரையை கடக்கவுள்ள கஜா புயல் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை மற்றும் நாகை இடையே 15ம் தேதி கஜா புயல் கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கஜா புயலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கஜா புயலுக்கு முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனைக்கூட்டம் - முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு.

Comment

Successfully posted