கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பேரணி - வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம்

Dec 15, 2018 07:00 AM 323

வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் பேரணியாக சென்று துணை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கஜா புயல் கரையை கடந்த போது நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.

இந்த நிலையில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து பேரணியாக சென்ற ஏராளமான விவசாயிகள், துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர். முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே தங்கள் கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Comment

Successfully posted