நகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டி சென்ற நபர்கள்

Jun 25, 2019 07:21 PM 62

சென்னையில் நகை வாங்குவது போல் நடித்து, தங்க மோதிரங்களை விரல்களில் மாட்டி சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி இ.எச்.சாலையில் சுதர்சனம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த மர்மநபர்கள் இரண்டு பேர், மோதிரங்களை காட்டச் சொல்லியுள்ளனர். பின் அவர்கள் மோதிரங்களை விரல்களில் போட்டு பார்த்துள்ளனர். சுதாரித்து கொண்ட நகைக்கடை உரிமையாளர் சுதர்சனம், விரல்களில் அணிந்த மோதிரங்களை திருப்பி கேட்டுள்ளார். அப்போது ஒருவர் தப்பியோட, மற்றொவருவர் சுதர்சனத்தை தாக்கி விட்டு தப்பியோடினார்.

Comment

Successfully posted