சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

Dec 21, 2019 01:14 PM 448

தேனியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யா கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற இவ்வழக்கில், குற்றவாளி சூர்யாவுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 7 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.

Comment

Successfully posted