விளையாட்டுச் சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி-தக்க நேரத்தில் உதவிய காவல்துறை அதிகாரி!

Sep 19, 2020 05:30 PM 771

தம்பி அடித்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, சாலையில் ஆதரவற்று இருந்த பள்ளி சிறுமியை, பாதுகாப்பாக மீட்ட உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

நேற்று இரவு சென்னை காரப்பாக்கம் அருகே, ஓ.எம்.ஆர். சாலையில் சிறுமி ஒருவர் தனியாக அமர்ந்திருந்தார். இதனைப் பார்த்த, கண்ணகிநகர் உதவி ஆய்வாளர் வேலு, அச்சிறுமியிடம் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த நர்மதா என்பதும், தம்பி அடித்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, எங்கு செல்வது என்பது தெரியாமல் சாலையில் தனியாக அமர்ந்திருந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சிறுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவரது பெற்றொர் நந்தகுமார், வித்யா என்று தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை செய்ததில், நண்பகலில் இருந்து நர்மதாவை அவர்கள் தேடிவந்தது தெரிய வந்தது. இந்நிலையில், தனியாக இருந்த சிறுமியை தக்க நேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் வேலுவிற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comment

Successfully posted