"அமெரிக்காவில் புதிய மேயராக தேர்தெடுக்கப்பட்ட ஆடு"

Mar 14, 2019 12:11 PM 257

அமெரிக்காவின் ஃபேர் ஹேவன் நகரத்திற்கு புதிய மேயராக ஆடு தேர்தெடுக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் ஆச்சயர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெர்மோண்ட் மாநிலத்தில் உள்ள ஃபேர் ஹேவன் (Fair Haven) என்ற சிறிய கிராமத்தின் புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஒன்று இந்த வாரம் நடைபெற்றது.

சுமார் 2,500 குடியிருப்பாளர்கள் வாழும் அந்த நகரத்தின் மேயராக லிங்கன் என்றவர் 15 வேட்பாளர்களைத் தோற்கடித்து இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் லிங்கன் என்றவர் மனிதரல்ல...அது ஓர் ஆடு.

நகர நிர்வாகி ஜோசஃப் கண்டர் (Joseph Gunter) நகரத்தின் தலைவராகப் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் மேயர் என்று யாரும் இல்லை. எனவே ஒரு ஆட்டை மேயராக

தேர்ந்தெடுத்து அதன் மூலம் நிதி திரட்டி பூங்கா ஒன்றை கட்ட ஃபேர் ஹேவன் நகர தலைவர் முடிவெடுத்துள்ளார்.

Comment

Successfully posted