ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

Sep 09, 2019 12:21 PM 128

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து 30 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்து விற்பனையாகி வருகிறது. சென்னையில் 24 காரட் தங்கம் கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 816 ரூபாய்க்கும், சவரன் 96 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

ஆபரணத் தங்கம் கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 659 ரூபாய்க்கும், சவரன் 96 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, 1 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 51 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted