தங்கம் விலை சவரனுக்கு 34ஆயிரத்தை கடந்தது!

Apr 02, 2021 02:28 PM 5780

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மேலும் உயர்ந்து ஒரு சவரன் மீண்டும் 34 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 24 காரட் தங்கம் கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 626 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 29 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 267 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரண் ஆபரணத் தங்கம் 232 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 30 காசுகள் அதிகரித்து, 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து, 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted