இலங்கையின் புதிய அதிபராகத் பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச

Nov 18, 2019 02:00 PM 46

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, 8வது புதிய அதிபராகத் இன்று பதவியேற்றார். 

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றார். பதிவான வாக்குகளில் கோத்தபய ராஜபக்ச 52%வாக்குகளும், சஜித் பிரேமதாசா 42% வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் 13 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச அநுராதபுரத்தில் நடைபெறும் விழாவில், 8வது புதிய அதிபராகப் பதவியேற்றார். 

Comment

Successfully posted