அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Mar 11, 2019 10:40 AM 158

புளியங்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள புளியங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்வதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தமிழக அரசே நெல்லை நேரடியாக கொள்முதல் செய்வதால் ஒரு குவிண்டாலுக்கு 1,840 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இதனால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைத்த தமிழக அரசிற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர் .

Related items

Comment

Successfully posted