மூதாட்டியை அடித்து கொடுமைப்படுத்திய மகன் : சொத்தை அபகரித்துவிட்டதாக மூதாட்டி புகார்

Sep 13, 2020 12:14 PM 4343

தஞ்சை மாவட்டத்தில், சொத்தை கைப்பற்ற அடித்து கொடுமை செய்த மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரத்தநாடு அருகே சோழன்குடிகாட்டில் வசித்து வரும் 82 வயது மூதாட்டியான சரோஜா என்பவர், முதியோர் காப்பகம் ஒன்றில் வசித்து வருகிறார். மூதாட்டியின் மகனான ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் சின்னையன், மூதாட்டியை அடித்து கொடுமைப்படுத்தியாகவும், சொத்தை அபகரிக்கும் நோக்கில் மூதாட்டியின் மகள் ஜெயாவிடம் கையெழுத்து கேட்டு தகராறு செய்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், சின்னையன் சொத்தை முழுவதுமாக அபகரிக்க தம்மையும், தமது மகள் ஜெயாவையும் அடித்தாக கூறிய மூதாட்டி, சின்னையன் மீது நடவடிக்கை எடுத்து, சொத்தை மீட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Comment

Successfully posted