திருட்டு பசங்களுக்கு இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்: ட்வீட் போட்ட ஹர்பஜன்

Aug 13, 2019 05:39 PM 504

வயதான தம்பதியினர் கொள்ளையடிக்க வந்த திருடர்களை தானே விரட்டி அடித்த சிசிடிவி காட்சி குறித்து ட்விட்டரில் தமிழ் புலவரான ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த வயதான தம்பதியினரின் வீட்டில் 12ம் தேதி காலை 5.30 மணியளவில் இரண்டு கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.அதனை கண்ட தம்பதியினர் சிறிதும் யோசிக்காமல் கொள்ளையர்களை அடித்து விரட்டும் சிசிடிவி காட்சியானது சமூக வலைதளங்களில் பரவியது.அவர்களின் துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் மற்றும் தமிழ் புலவரான ஹர்பஜனும் இந்த தம்பதியினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

திருட்டு பசங்க எல்லாருக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.வீரம், பாசத்துக்கு முன்னாடி நான் பனி,பகைக்கு முன்னாடி புலி-னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிடாங்க.இது தமிழனின் நேர்கொண்ட பார்வை என குறிப்பிட்டு திருடர்களுடன் சண்டையிட்ட வயதான தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted