ஹரி நாடார் பண மோசடி வழக்கு - கோடியில் குவியும் புகார்கள்

Jun 15, 2021 03:59 PM 716

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில், குஜராத்தை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபருக்கு வங்கியில் 360 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி, சுமார் 7 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில், ஹரி நாடார் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹரி நாடார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் இஸ்மாயில் என்பவருக்கு, வங்கியில் 100 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி, சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி புகாரில் ஹரி நாடார் ஏற்கனவே கைதானதால் அதிர்ச்சி அடைந்ததாக, இஸ்மாயில் சார்பாக புகார் அளித்துள்ள அப்துல் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்திடம் பணம் பெற்று மோசடி செய்த ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் கோரப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

image

 

Comment

Successfully posted