தமிழகத்தில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Mar 29, 2020 03:09 PM 251

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், விவசாய பொருட்கள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளை பொருட்கள் சந்தை கமிட்டி நடத்தும் மண்டிகள், உர விற்பனை நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய இயந்திர வாடகை மையங்கள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனங்கள், மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களின் இயக்கத்துக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிக்கும் தடையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comment

Successfully posted