டிவிட்டரில் டிரெண்டாகும் #குடிகெடுக்கும்ஸ்டாலின் ஹேஷ்டேக்

May 06, 2021 04:25 PM 488

டிவிட்டரில் குடிகெடுக்கும் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திமுகவின் அராஜகம் தொடங்கி விட்டது. `இன்னும் பதவி ஏற்கவேயில்லை அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்க’ என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தி திமுகவினர் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.  கோவையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வெற்றிக்கு முன்பே கட்சிக்கொடியை ஏற்றி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல காலை 8 மணிக்கே மதுக்கடைகளை திறந்து வேலைக்கு செல்லும் மக்களை குடிக்க வைக்கும் அவலத்தையும் திமுக அரசு அரங்கேற்றியுள்ளது. இந்நிலையில் அதிகாலையிலேயே மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்கவைக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து #குடிகெடுக்கும்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

Comment

Successfully posted