சிந்துபாத் ட்ரைலரில் இதை கவனித்தீர்களா?

Jun 17, 2019 03:39 PM 815

விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்கள் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சிந்துபாத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இந்த படத்திலும் அஞ்சலியின் தோற்றம் கம்பீரமாக உள்ளது.தான் நினைத்ததை பேசுபவளாக அஞ்சலியின் கதாபாத்திரம் அமைந்துள்ளது.

இதில் மற்றொரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது.விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார்.இருவரும் தெருவில் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகள் அமைந்துள்ளது.இருவரின் நிஜ வாழ்க்கை சேட்டையை இப்படத்தில் காணலாம் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.மேலும் அவரின் மகளும் சங்கத்தமிழன் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted