அமைச்சர்கள் குறித்த ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்கத்தக்கது-அதிமுக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

Jan 07, 2019 12:29 PM 230

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுவது தவறானது என்று அதிமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் குறித்துதான் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார் என்றும், அதனடிப்படையிலேயே ராதாகிருஷ்ணனின் பின்புலத்தை விசாரிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். அமைச்சர்களை எதிர்க்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் பதிவு செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தை டிடிவி தினகரன் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டினர். 

Comment

Successfully posted