ஜோக்கர் கதாபாத்திரத்திற்காக 43 நாட்கள் தன்னைத்தானே சிறையில் துன்புறுத்தி கொண்ட ஹீத் லெட்ஜர்

Jan 22, 2020 08:10 PM 1047

ஒரு சிலரை, ஒரு சிறு வட்டத்துக்குள் சுருக்குவது கடினம். தான் யாரென்று நிரூபிக்க, ஒரு சிலருக்கு இந்தச் சின்ன உலகமே போதாது. அந்த ஒரு சிலருள் ஹீத் லெட்ஜரும் ஒருவர்.

ஒரு ஹாலிவுட் சூப்பர் ஹீரோ பட வில்லனின் உருவத்தை, அந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்களை போஸ்டர்களாகவும், வாகனங்களில் ஸ்டிக்கர்களாகவும், சமூக வலைதளங்களின் முகப்புப் படங்களாகவும் வைத்துக் கொண்டாடியதைக் கேள்விப்பட்டதுண்டா?

2008 ஆம் ஆண்டு வெளியான ’தி டார்க் நைட்’ படத்தில் ஹீத் லெட்ஜர் ஏற்று நடித்த ஜோக்கர் கதாபாத்திரத்தின் மூலம் இது சாத்தியமானது.

image

1979 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுல பிறந்த ஹீத் லெட்ஜர் ஹீத் லெட்ஜர், சிறு வயதில் தான் இருக்கும் வீட்டின் சீலிங்கில், நட்சத்திரங்கள் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டி, `இங்க நான் போவேன், ஒரு நாள் நான் நடிகரா வருவேன்' என அவரின் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.  அப்படி நடிப்பு ஆசையோடு இருந்த அவர் 20 வயதில திரைத்துரைக்கு வந்தார்.  Clowning Around என்கிற தொலைக்காட்சி தொடர்ல முதன் முதல்ல அடியெடுத்து வைத்தார். பின்  Blackrock திரைப்படம் மூலமா திரைப்படங்களில்  நடிக்க ஆரம்பித்தார். 10 Things I Hate About You, The Patriot, A Knight's Tale உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஹீத் லெட்ஜருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்துது.

image

குறிப்பாக கிறிஸ்டஃபர் நோலன் இயக்கத்தில்  ரிலீஸான டார்க் நைட் திரைப்படம் ஹீத் லெட்ஜர் என்கிற கலைஞருக்கு  புகழ எக்காலத்துலயும் அழிக்க முடியாதுன்னு சொல்ற அளவுக்கு அமைந்தது. பேட்மேனோட வில்லனா ஜோக்கர் கதாபாத்திரத்துல நடிச்சு திரையுலகத்தையே மிரளவைத்தார். பல சிக்கல் நிறைந்த ஜோக்கர் கதாபாத்திரத்துக்காக 43 நாட்கள் தன்னைத்தானே சிறையில அடைத்து தனிமைப்படுத்தி தயாரானாரு ஹீத் லெட்ஜர்.

ஆனா அந்த படத்துக்கு கிடைச்ச பாராட்டுக்களையும் பாக்குறதுக்கு அவர் இல்லாம போனதுதான் மிகப்பெரிய சோகமா அமைந்தது. அளவுக்கு அதிகமா தூக்க மாத்திரை எடுத்துகிட்டதுனால டார்க் நைட் திரைப்படத்தோட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்துகிட்டு இருந்தபோதே இறந்துபோனாரு ஹீத் லெட்ஜ்ஜர்.

இனிவரும் காலங்களில் எத்தனை ஜோக்கர்கள் வந்தாலும் உலகின் ஏதோவொரு மூலையில் உள்ள ஏதோவொரு ரசிகரின் செல்போன் திரையிலோ, பைக் ஸ்டிக்கராகவோ கிழிந்த வாயுடன் ஜோக்கராக லெட்ஜர் சிரித்துக் கொண்டுதான் இருப்பார்.

Comment

Successfully posted