உதகையில் தொடர்ந்து வெளுத்து வாங்கும் கனமழை..

Aug 08, 2019 10:14 AM 262

 தொடர் மழை காரணமாக அவலாஞ்சி மற்றும் அப்பர்பவானி பகுதிகளுக்கு, ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருவதால், சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவலாஞ்சி மற்றும் அப்பர்பவானி பகுதிகளில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்த பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

 

Comment

Successfully posted