2019ம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட hashtag பட்டியலை வெளியிட்டது ட்விட்டர்..

Dec 10, 2019 03:29 PM 2807

ட்விட்டர் இந்தியா #This happened2019 என்ற ஹேஸ்டேகில் 2019ஆம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜிகள், அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக், ட்விட்டரில் அதிகமாக பேசப்பட்ட அரசியல் தலைவர்கள் இப்படி பொழுதுபோக்கு, அரசியல், சினிமா விளையாட்டு, உள்ளிட்ட துறைகளில் உள்ள பிரபலங்களின் சாதனைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

image

அதேபோல் விஜயின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியிட்ட பிகில் திரைப்படத்தின் போஸ்டர் தான் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா போஸ்ட் செய்துள்ளது.

 

மேலும் 2019ஆம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டேக் பட்டியலில் முதல் இடத்தை #loksabhaelection2019 என்ற ஹேஸ்டேக் பிடித்துள்ளது.

 

image

இப்போது எமோஜிகள் தான் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் ட்விட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட எமோஜிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

image

 

image

image

 

இப்படி 2019ஆம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனையை வெளியிட்டதை தொடர்ந்து #Thishappened2019 என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Comment

Successfully posted