50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

Jan 12, 2021 07:13 AM 2732

திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்ற அரசாணையை திரும்பப் பெற்று, மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

பாதுகாப்பு இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினர். திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted