மதுரை இளைஞர் மர்ம மரணம் - மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Oct 08, 2020 09:39 PM 455

மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த இதயக்கனி என்ற இளைஞர் மர்மமாக உயிரிழந்தது குறித்த வழக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "சட்டவிரோத காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முழு உடற்கூராய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தடய அறிவியல் அல்லாமல் சாதாரண மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என்றும், உசிலம்பட்டி மருத்துவமனையிலேயே உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் அவசரமும் என்ன? என்றும் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இதயக்கனியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்யவும், அதனை முழு வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comment

Successfully posted