நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாவதில் சிக்கல்?

Sep 16, 2020 02:24 PM 605

நடிகர் சூர்யா நடத்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில் “கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா? அந்த மேல்சாதிகாரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா” என்ற சாதி தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதால், அப்படத்திற்கு 2022-ம் ஆண்டு வரை தடை விதிக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் அமர்வு , மனுதாரரின் புகார் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Comment

Successfully posted