தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..

Jun 15, 2019 12:30 PM 521

தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான பில் டியூக் தர்பார் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஏ.ஆர்.முருகதாஸிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.

image

 

பேட்ட திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.அவர் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.மேலும் சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா 11 ஆண்டுகள் கழித்து தர்பார் திரைப்படத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளார்.

image

பேட்ட திரைப்படத்தில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த அனிருத், தர்பார் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.


இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரான பில் டியூக் தர்பார் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனக்கு தமிழ் தெரியாது, ஆனால் ரஜினியின் அமெரிக்க உறவினராக அல்லது நயன்தாராவின் மாமாவாக நடிக்க முடியும்.அதே போல் ஸ்ரீகர் பிரசாத்தும், சந்தோஷ் சிவனும் நான் நடித்த காட்சிகளை அனைவரும் ரசிக்கும்படி நன்றாக எடிட் செய்வார்கள்.உலகம் முழுவதும் இருக்கும் நட்சத்திர நடிகர்களை வைத்து இசையமைப்பாளர் அனிருத் கூட ஒரு ஹிட் பாடல் கொடுக்கலாம்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று ட்வீட் செய்துள்ளார்.


இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.முருகதாஸ் ‘சார்...இது உண்மையாகவே நீங்கள் தானா? என ஆச்சரியத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted