கோவை- கோயில் வாசலில் பக்தர்களுக்கு கொரோனா தடுப்புமருந்து விநியோகம்

Sep 19, 2020 05:47 PM 957

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நல்லறம் அறக்கட்டளை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின் பேரில், நல்லறம் அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பி.அன்பரசனின் உத்தரவுப் படி ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையின் பிரசித்தி பெற்ற கோயிலான உக்கடம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலுக்கு வருகைதந்த பக்தர்களுக்கு நல்லறம் அறக்கட்டளை சார்பில், அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஹோமியோபதி மாத்திரைகள், கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், முகக்கவசம் அணிவதன் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Comment

Successfully posted