மனைவியுடன் கள்ளக்காதல் ; 4 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கணவன்!

Jun 16, 2021 10:03 PM 1513

கல்லிடைக்குறிச்சி அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை 4 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் 31 வயதான வேலு.

கார் ஓட்டுநரான இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த சுதாகரின் மனைவி மணிமேகலைக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதனை அறிந்த சுதாகர், அவரது மனைவி மணிமேகலையிடம் கடுமையாக சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டதில், சுதாகரை பிரிந்து மணிமேகலை வேலுவுடன் ஊரை விட்டு சென்றுள்ளார்.

பின்பு அங்கிருந்து இருவரும் மும்பைக்கு சென்று தனியாக வசிக்க தொடங்கியுள்ளனர்.

இதனை கேள்விப்பட்ட மணிமேகலையின் கணவர் சுதாகர், கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகியி வெளியில் தலைகாட்ட முடியாத நிலைமையில் இருந்துள்ளார்.

இப்படியே நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு வேலு மட்டும் மும்பையில் இருந்து தனது குடும்பத்தை பார்ப்பதற்காக, சொந்த ஊரான பாப்பான்குளத்திற்கு வந்துள்ளார்.

இதனை அறிந்த சுதாகர் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, வேலூவை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த 14-ம் தேதி இரவு அயன்சிங்கம்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்க்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வேலுவை சுதாகரும் அவரது கூட்டாளிகளும் வழிமறித்துள்ளனர்.

தன்னுடைய மனைவியை அபகரித்து சென்றுவிட்ட உன்னை சும்மா விடமட்டேன் என்று மறைத்து வைத்திருந்த கத்தியால், வேலுவின் கழுத்தை அறுத்தும் கை, மற்றும் கால்களை துண்டு துண்டாக வெட்டியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சுதாகர் , சுடலைமுத்து, இசக்கிமுத்து மூவரும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அவர்களாகவே சென்று சரண் அடைந்துள்ளனர்.

வேலுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted