சென்னையில் பிப்ரவரி 28 வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தடை

Feb 14, 2020 07:05 AM 365

சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி வரை பேரணி மற்றும் கண்டன ஆர்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,  பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகள், சாலை, மற்றும் தெருக்களில், கூட்டம் கூடவும், பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகக்  கூறப்பட்டுள்ளது.  இருப்பினும் விருப்ப எண்ணமுள்ள விண்ணப்பதாரர்கள் ஐந்து நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted