நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை விசாரணை?!

Mar 12, 2020 04:05 PM 629

பிகில் படத்தில் கிடைத்த வருவாய்க்கு முறையான வரிச் செலுத்தவில்லை என்ற புகாரில், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரகத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, கடலூரில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை பனையூர் அழைத்து வந்த அதிகாரிகள் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். தற்போது, விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் நடிகர் விஜயின் பனையூர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாஸ்டர் பட விநியோகத்தில், இணை தயாரிப்பாளர் லலித்குமாருக்கு கிடைத்த 50 கோடி ரூபாய்க்கு முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comment

Successfully posted