இந்தியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது!

Mar 06, 2020 04:50 PM 879

 டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரசால், 30 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உத்தம் நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், அவர் சமீபத்தில் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. எனினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாநில அரசுகள் மக்கள் அதிகம் கூடும் வகையில் நடத்தப்படும், நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை மக்கள் அதிகம் கூடும் அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Comment

Successfully posted