ஐசிசி தரவரிசை பட்டியல்: இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது

Mar 14, 2019 08:03 PM 344

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்த நிலையில், தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா அணி சொந்த மண்ணில் 2 க்கு 3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

இந்நிலையில், சர்வதேச கிரிகெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணி ஒரு புள்ளியை இழந்து 120 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 112 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அணிகள் ரன் ரேட் அடிப்படையில், நியூசிலாந்து 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்ற நிலையில், 100 புள்ளிகளுடன் 6-வது இருந்த ஆஸ்திரேலியா 103 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Comment

Successfully posted