இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது

Feb 21, 2020 04:50 PM 276

இந்தியன்-2 படப்பிடிப்பின் போது, கிரேன் விழுந்து 3 பேர் பலியான சம்பவத்தில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. அப்போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில், உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து அந்த லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கிரேன் ஆபரேட்டர் ராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்ய படப்பிடிப்பு தளத்தில் இருந்த கமல்ஹாசன், ஷங்கர் உள்பட பலருக்கும் சம்மன் அனுப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Comment

Successfully posted