திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் : பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி

Apr 05, 2021 09:54 AM 2390

மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால், வருகிற 9ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் தொடரில், மும்பையில் நடைபெறும் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, தொடர் அட்டவணை படி, மும்பை வான்கடே மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

ஐ.பி.எல் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்பதால், கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் கங்குலி குறிப்பிட்டார்.

Comment

Successfully posted