ரியோவுக்கு ஜோடியாக இந்த ஹீரோயினா ?

Oct 15, 2019 03:27 PM 674


நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து ரியோ நடிக்கும் புதிய படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமாகி, வெள்ளித்திரையில் கலக்கிகொண்டிருப்பவர் நடிகர் ரியோ.மற்ற நடிகர்கள் போல ஆக்‌ஷன், த்ரில்லர் என்று படத்தை தேர்வு செய்யாமல் நகைச்சுவை பாணியில் மட்டும் நடித்து, அனைவரின் மனதையும் கவருவது இவருக்கு சுலபம்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து யுவன் இசையில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை பாணா காத்தாடி,செம போத ஆகாத ஆகிய திரைப்படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்க, பாசிடிட்வ் பிரிண்ட் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.மேலும் இதில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted