அடுத்த படத்தில் அட்லியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

Oct 15, 2019 06:35 PM 3692


ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி.முதல் படத்திலேயே திரைத்துறையில் தனது பெயரை பதித்தார்.பின்பு விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் ஆகிய மாஸ் படங்களை கொடுத்தார்.தற்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைந்து ஹாட்ரிக் அடித்துள்ளனர்.இந்த வெற்றி கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் அட்லி தனது அடுத்த படத்தில் ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.இப்படத்தை SRK'S Red chillies entertainment தயாரிக்க உள்ளது.இந்த படத்தில் அட்லியின் சம்பளம் 30 கோடி என கூறுகின்றனர்.

மேலும் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியலில் அட்லி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.பிகில் ட்ரைலரை பார்த்துவிட்டு ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லி மற்றும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted