`உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ - தோனி குறித்து பிசிசிஐ!

Mar 10, 2020 06:31 PM 829

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதைக்காண ஏராளமான ரசிகர்கள் குவிகின்றனர். இது தொடர்பான தோனியின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன.  தோனி களத்தில் ஆடுவதைப்பார்த்து 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவரது ஆட்டத்தைக்காண ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில்  இந்த ஐபிஎல் தொடரில் தோனி நன்றாக விளையாடினால் டி-20 உலகக்கோப்பைத் தொடருக்கு அழைக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ``தென்னாப்பிரிக்கா தொடருக்கு தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால், அவரை அணியில் சேர்ப்பது குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாமல், சிறப்பாக விளையாடும் வீரர்களின் பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆகவே, உங்களுக்கு நிறைய இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தோனியை மீண்டும் இந்திய அணியை சார்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலில் இருக்கும் நிலையில், பிசிசிஐ நிர்வாகி ஒருவரின் இந்த கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தைப்பொறுத்து தான் இந்திய அணியில் அவர் இணைவாரா இல்லையா என்பது குறித்து தெரியவரும் என்கிறார்கள்.

Comment

Successfully posted