காரைக்கால் திமுக இளைஞரணி நிர்வாகி வீட்டில் ஐ.டி.ரெய்டு

Mar 31, 2021 05:38 PM 505

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திமுக இளைஞரணி மாநில அமைப்பாளர் முகமது ரிஃபாஸ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து முகமது ரிஃபாசிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த அதிகாரிகள், ரிஃபாசுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Comment

Successfully posted