ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்

Dec 20, 2018 03:39 PM 150

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பெருமாள்சாமி, சுதாகரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்றும் ஆஜரானார்.

Comment

Successfully posted