காதல் தோல்வியால் சின்னத்திரை நடிகை தற்கொலை !!!

Feb 06, 2019 11:51 AM 890

சின்னத்திரை நடிகைகள் மனஅழுத்தம் மற்றும் பல சிக்கல்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகமாகி வருகிறது.

தெலுங்கு சின்னத்திரை நடிகை நாக ஜான்சி. இவருக்கு வயது 21. இவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கில் டிவி தொடர்கள் சிலவற்றில் நடித்துள்ள ஜான்சி, கடந்த சில மாதங்களாக போதிய வாய்ப்பு இல்லாததால் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார் . அதுமட்டும் இல்லாமல் ஜான்சி, தூரத்து உறவினரான இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஜான்சி மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும். காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அவரது போன் மற்றும் சில விஷயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted

Super User

No comments.


Super User

so sad


Super User

so sad