மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை நாளை திறக்கப்படுகிறது - முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் திறந்து வைக்கின்றனர்

Nov 13, 2018 09:18 PM 1115

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை திறந்து வைக்கின்றனர்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை புதிதாக நிறுவ முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நாளை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட உள்ளது. காலை 9.30 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிலையை திறந்து வைக்கின்றனர். நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள்,அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
 

Comment

Successfully posted

Super User

வெற்றி தாய்Super User

மனிதர்கள் உள்ளவரை அம்மாவின் புகழ் நிலைத்து நிற்கும்


Super User

உலகத்தில் மனிதர்கள் உள்ளவரை அம்மா வின் புகழ் நிலைத்து நிற்கும்


Super User

அம்மாவின் பெயரை சொல்வதை விட அம்மா என்றே அழைக்கலாம் முன்னாள் முதல்வர் அம்மா அழைக்கலாம்


Super User

I'm very very happy