கன்னியாகுமரியின் பிரபல நகைக்கடையில் 140 சவரன் நகை கொள்ளை

Dec 15, 2019 12:30 PM 445

கன்னியாகுமரியில் பிரபல நகைக்கடைக்குள், தலைக்கவசம் அணிந்து வந்து, 140 சவரன் நகையை கொள்ளைடித்துச் சென்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில், நள்ளிரவில் தலைக்கவசம் அணிந்தபடி பின்பக்கமாக உள்ளே சென்ற மர்ம நபர், கடையில் இருந்த 140 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கடையின் உரிமையாளர்கள், அருகில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர்கள் கூச்சலிட, சுதாரித்துக் கொண்ட கொள்ளையன், சுவற்றின் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளான். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்தும், மோப்ப நாய் உதவியுடனும், மர்ம நபர் குறித்த தடயங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

Comment

Successfully posted