மதுரை கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

Aug 07, 2019 04:39 PM 630

மதுரை அழகர்கோயில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், ஆடிப்பெருந் திருவிழா வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள், கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று "கோவிந்தா” என்ற கோஷம் முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர். கொடிமரம் அமைந்துள்ள மண்டபத்தில், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தேரோட்டத்தில் மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருகை புரிவர் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted