கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனியில் காப்புகட்டும் நிகழ்ச்சி

Dec 05, 2019 10:27 AM 168

பழனி மலைக் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இம்மாதம் 10-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தீபத்திருவிழா தொடங்கி உள்ளது.

இதனையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. ஏழாம் நாள் திருவிழாவான 10-ம் தேதி மாலை பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

Comment

Successfully posted