ஆயிரம் வழக்கு போட்டாலும் எதிர்கொள்வாராம் , ஆஸ்பத்திரியில் அபயம் தேடிய கருணாஸ்

Oct 13, 2018 05:33 PM 1095

"மது அருந்த ஒரு லட்சம் புகழ்" கருணாஸ் மீது பாய்ந்த வழக்குகளால், வேலூர் சிறையில் கம்பி எண்ணி, பின்பு பம்பி, நீதிமன்றம் சென்று விடுதலையானார்.

இப்போது தன் மீது ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் என செல்லும் இடங்களில் எல்லாம் கூச்சமின்றி கூறி வருகிறார். அண்மையில் நடைபெற்ற பில்லா பாண்டி என்ற திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவிலும் அரைத்த மாவையே திரும்ப அரைத்தார்.

புளியங்குடி போலீஸ் சென்னை வந்தபோது, எலி போல் மருத்துவமனையில் பதுங்கியவர் தான் இந்த புலிப்படைத் தலைவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், கருணாசுக்கு பதிலாக, ஒரு ஆட்டுக்குட்டியை நிற்க வைத்திருந்தால் கூட, திருவாடனை தொகுதியில் அந்த ஆட்டுக்குட்டி வெற்றி பெற்றிருக்கும்.

கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சட்டமன்ற உறுப்பினர் பதவி இவருக்கு கிடைத்திருக்கிறது என்றால், அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் போட்ட தானம் அல்லவா? அதை கூட நினைத்து பார்க்காமல் நன்றி கெட்டு, அம்மா அவர்களின் அரசுக்கு எதிராக சவடால் விடும் இவரை என்னவென்று சொல்வது. இவரையும் நம்பி, பொது நிகழ்ச்சிகளுக்கு இவரை அழைப்பவர்களை நினைத்தால் தான் வேடிக்கையாக உள்ளது.

Comment

Successfully posted

Super User

லொடுக்கு கருநாய்