நான் உன்ன பாக்காம எப்படி இருப்பேன்: லாஸ்லியாவிடம் கெஞ்சும் கவின்..

Jul 09, 2019 06:21 PM 680


பிக்பாஸ் வீட்டில் இன்று 16வது நாள்.தினம் தினம் புதுவிதமான சர்ச்சை பிக்பாஸ் வீட்டில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு பாத்திமா பாபு வெளியேறினார்.அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் process-உம் நடந்து முடிந்தது.

நேற்று பிக்பாஸ் வீட்டில் வனிதாவிற்கும்-அபிராமிற்கும் வேற லெவலில் சண்டை நடந்தது. அபிராமி,ரேஷ்மா மற்றும் ஷெரினிடம் எதையோ சொல்லி கொண்டிருந்தார். அப்போது வனிதா அவரை பேசவிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.அதனால் கோபம் அடைந்த அபிராமி fish market போல் கத்திக்கொண்டிருக்கிறீர்கள் என கூறினார்.அதனை கேட்டு கோபமடைந்த வனிதா எப்படி நீ fish market என கூறுவாய் என்று சண்டை ஆரம்பிக்க, அபிராமி விளக்கம் அளிக்க அப்படியே நேற்றைய நாள் முடிந்தது.

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் லாஸ்லியா கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார்.அது என்னவென்றால் ’இன்னைக்கு முழுக்க நீ என்னோட முகத்தை பாக்கவே கூடாது.அதற்கு கவினோ ’நாள் முழுக்க உன்ன வச்ச கண்ணு எடுக்காம பாத்துக்கிட்டே இருக்கனும்னு சொல்லு அது டாஸ்க்,இதுலாம் முடியாது என கூறுகிறார்.லாஸ்லியாவோ நீ பாக்கவே கூடாது என அழுத்தமாக கூற,கவினோ பாக்காம எப்படி மச்சான் என கெஞ்சுகிறார்.

பின்னர் கவின் இந்த டாஸ்க் சாக்‌ஷிக்கு தெரிந்தால் கஷ்டபாடுவாள் என கூற, லாஸ்லியாவோ அதற்கு நக்கலாக அவள் ஒன்னும் கஷ்டப்படமாட்டாள் என கூறுகிறார்.இன்றைய பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் கொஞ்சம் ரொமேன்ஸ், கொஞ்சம் சண்டை இருக்கிறது.

Comment

Successfully posted