கேரளாவில் நாளை அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார்

Nov 14, 2018 03:19 PM 359

கேரளாவில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவில் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை வரும் வெள்ளிக் கிழமை தொடங்க உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதிலும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையில் மாநிலத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

 

Comment

Successfully posted