கேரள தங்க கடத்தல் வழக்கு - சிவசங்கரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 11 மணிநேரம் விசாரணை

Oct 11, 2020 07:18 AM 550

கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக அம்மாநில முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

கேரள தங்க கடத்தல் வழக்கில், அமலாக்கத்துறையினர் 303 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை 8 முறை சந்தித்துள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் பலமுறை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்பேஸ் பார்க் திட்டத்தில் முதலமைச்சரின் ஒப்புதலின் பேரில் தமக்கு பணி நியமனம் கிடைத்ததாக கூறிய ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு கமிஷன் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில், சிவசங்கரிடம் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கொச்சினில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் 11 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

Comment

Successfully posted