கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - சபரிமலைக்கு பக்தர்கள் வர தடை!

Mar 14, 2020 05:05 PM 848

கொரோனா வைரஸால், சபரிமலைக்கு பக்தர்கள் வர கேரள அரசு தடை விதித்துள்ளதால், இருமுடி கட்டி வரும் ஐயப்ப பக்தர்கள், சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். கேரளாவில் கொரோனா வைரஸ், நோய் தொற்று காரணமாக 45 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டி வந்து பதினெட்டுப்படி ஏறி, நெய் அபிஷேகம் செய்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் தங்களுக்கு இந்த வருடம் சபரிமலை செல்ல முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted