சினிமா துறையில் உங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வந்ததா? குஷ்பூ சொன்ன பதிலை கேளுங்கள்

Oct 13, 2018 05:20 PM 774

மீ டூ என்ற ஹேஸ் டேக் மூலம் திரைத்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மீ டூ ஹேஸ் டேக் மூலம் அம்பலமாகி வரும் விசயங்கள் குறித்து விசாரிக்கப்படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்தார்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ, 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், நீங்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என பலர் தன்னிடம் கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்படி எதுவும் இல்லை என்றும் தான் அப்படி எதாவது கருத்தை தெரிவிப்பேன் என நினைத்து ஏமாந்திருந்தால் அதற்காக தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சொந்த பிரச்னைகளை எதிர்கொள்ளவும், கடுமையாக எதிர்வினையாட்டவும் தனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையே தான் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related items

Comment

Successfully posted